#kavithai — Public Fediverse posts
Live and recent posts from across the Fediverse tagged #kavithai, aggregated by home.social.
-
உலகம் எவ்வளவு
பெரியதாக இருக்கும்போது
என் இதயம் எப்போதும்
உனது அருகில் இருக்கும் -
எண்ணங்கள் அழகானால்
வாழ்க்கையும் அழகாகும் -
தோளில் சாயும் நிமிடம்
மனதின் எல்லா
சுமைகளையும் கரைக்கிறது -
வீழ்ந்தால் மீண்டும் எழு
உன் பயணம் நிறைவதற்கு
இன்னும் தூரம் உள்ளது -
கேட்காமலேயே
தீர்த்து வைக்கிறாய்
ஏக்கங்களை
தந்தையின் மடியில்
தலைசாயும்
குழந்தையாய் நான் -
மௌனம் தோல்வி அல்ல
அது புதிய வெற்றிக்கான
இரகசிய திட்டம் -
என் கவலைகளுக்கு நீ
மருந்தாகின்றாய் உன்
கவலைகளை மறைத்து
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் இதயமே -
துக்கம் இதயத்தை உடைக்க அல்ல
உள்ளத்தை வலிமையாக்க தான் வருகிறது -
தொடாத தருணமே
எரியும் கனவாக மாறுகிறது -
நேரம் எடுத்தாலும்
வெற்றி உன்னைத் தேடிவரும்
நீ மட்டும் நின்றுவிடாதே -
கொந்தளிக்கு
உன் கோபத்தில் தான்
எத்தனை காதல்
அத்தனையும்
கொல்லுதே என்னை -
இமைகளின் கூச்சலில்
விழும் கண்ணீர்
உள்ளத்தின் சுமையை
வெளிக்கொணர்கிறது -
மறந்துட்டாங்களா
நினைச்சுட்டு
இருக்காங்களானு கூட
தெரியாம இன்னும்
மனசு மட்டும்
அவங்களையே
சுமந்துட்டு இருக்கு -
கனவுகள் நினைத்ததாலே
நிறைவேறாது அதை அடைய
உழைத்தால்தான் வெற்றி
உன் பாதையை நோக்கி வரும் -
இரவின் நட்சத்திரங்களையும்
மிஞ்சும் பிரகாசம்
காதலின் பார்வையில்
மட்டுமே தெரியும் -
சோர்வு வந்தால்
ஓய்வு எடு
கைவிடாதே -
மழை சின்னம் போல
அவளது சிரிப்பு
என் மேலே விழும்போது
உடல் முழுக்க சிலிர்ப்பு -
பொருட்களை
பயன்படுத்துங்கள் நேசிக்காதீர்கள்
மனிதனை
நேசியுங்கள் பயன்படுத்தாதீர்கள் -
காதல் என்பது
ஒருவரைத் தேர்வது அல்ல
ஒருவர் இல்லாமல்
முழுமையற்ற உணர்வை உணர்வதே -
யாருக்காகவும்
உன்னை மாற்றி கொள்ளாதே
உனக்காக தன்னையே
மாற்றிக் கொள்ளும்
ஒருவரை
என்றும் கைவிடாதே -
மாலை நேர வானம் சாய்ந்தபோது
காதல் நிறம் மனதில்
பரவி ஆனந்தம் தருகிறது -
நான் வெற்றி
அடைவேன் உடனடியாக
இல்லாவிட்டாலும் உறுதியாக -
பார்வை சந்தித்த நொடி
உலகம் நிற்கும் மாதிரி தோன்றியது -
பிறர் வெற்றியில்
வன்மம் கொண்டவன்
தன் வாழ்கையில்
வெற்றியைப் பெற மாட்டான் -
விரல் நழுவும்
அந்த ஒரு தொடுதல்
எண்ணங்களைச் சிதறடிக்கிறது -
செயல்களின் முடிவுகள்
முக்கியம் அல்ல
அந்தச் சவால்கள்
உன்னை வளர்க்கும்
பயணமே வாழ்க்கையின்
உண்மையான மகிழ்ச்சி -
மை கொண்டு
சிந்த விரும்பவில்லை
கண்ணீரை
உன் மடி சாய்ந்து
அழுது தீர்த்திடவே
ஏ(தா)ங்கி கொண்டிருக்கு
இந்த மனமும் -
ஓய்வின்றி ஓடுபவன் மட்டுமே
வெற்றியின் கதவை திறக்க முடியும் -
என்னுள் இருந்து
கொண்டே
எனை தவிக்கவிடும்
உன்னிதயமும்
பெரும் இம்சைதான்
நீயில்லா பொழுதுகளில் -
பாதுகாப்பு
அரணாய் நீயிருக்க
ஒவ்வொரு முறையும்
எனைத் தீண்ட முயன்று
ஏமாற்றத்திடனே செல்கிறது
மழை
(குடை) -
Friendship Quotes in Tamil - நட்பு கவிதைகள் - Happy Friendship Day Kavithai in Tamil
#tamil #tamilsms #tamilquotes #kavithai #tamilkavithai #friends #friendship #happyfriendshipday
https://tamilsms.blog/happy-friendship-day-kavithai-in-tamil/